தமிழகம் இந்தியா

மனைவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்! மனமுடைந்து விஷம் அருந்திய சோக சம்பவம்!

Summary:

Man died because of illegal relationship of his wife

சசிக்குமார் (வயது 37). கொடைக்கானல் அருகே உள்ள பி.எல்.செட்டு பகுதியில் வசித்து வருகிறர்.  கூலி தொழிலாளியான இவருக்கும்  நல்லூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்த செல்வராணி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

சசிகுமார் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் செல்வராணி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தனது மனைவியை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார் சசிகுமார். பேருந்தில் பயணம்செய்யும் போது தனது முகநூலை பார்த்துக்கொண்டே சென்றுள்ளார். முகநூலில் இருந்த ஒரு புகைப்படத்தை அதிர்ச்சியடைந்துள்ளார் சசிகுமார். அதில் அவரது மனைவியும் அதே ஊரை சேந்த இளைஞர் ஒருவரும் முத்தமிடும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனை பார்த்த சசிகுமார் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன் அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கியுள்ளார். பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவியிடம் இதுதொடர்பாக கேட்டார். அவரும், அந்த படத்தை உறுதி செய்வது போல பேசியதாக தெரிகிறது. சிறிதுநேரத்தில் சசிக்குமார் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement