பேச மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன், சென்னையில் பயங்கரம்!

பேச மறுத்ததால் காதலியின் கழுத்தை அறுத்த காதலன், சென்னையில் பயங்கரம்!


Man cutting throat of lover who rejected him in Chennai

தன்னை காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் எலிமருந்து குடித்துவிட்டதாக ஒரு இளைஞர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் வேலைப்பார்த்து வந்த பாரதி என்டர் பெண்ணிற்கும், அந்த ஷோரூமில் பைக் வாங்க வந்த பாலாஜி என்ற வாலிபருக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் காதல் விஷயம் இருவர் வீட்டிற்கும் தெரியவர முதலில் எதிர்த்தவர்கள் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் ஒரு சிக்கல்.  பாரதி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், பாலாஜி இந்து மதத்தை சேர்ந்தவர். இதனால் இருவரில் ஒருவர் மதம் மாறவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

boy killed

இந்நிலையில் பாலாஜியின் நடவடிக்கையில் அதிர்ச்சியடைந்த பாரதி பாலாஜியுடன் பேசுவதை குறைத்துள்ளார். மேலும் பாலாஜி தினமும் தண்ணி அடித்துவிட்டு பாரதியுடன் பிரச்னை செய்துள்ளார்.அதனால் ஒரு கட்டத்தில் கல்யாணமே வேண்டாம் என்று பாரதி முடிவெடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி பாரதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பாரதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பாலாஜியை திடீரென வீட்டில் பார்த்ததும் அவரிடம் பேச மறுத்துள்ளார் பாரதி. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி அங்கிருந்த கத்தியை எடுத்து பாரதியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். பாரதியின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

boy killed

இதனை தொடர்ந்து காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு மதுக்கடைக்கு சென்றுள்ளார் பாலாஜி. மதுக்கடையில் மதுவுடன் சேர்த்து விஷம் அருந்திவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடந்ததை கூறிய பாலாஜி பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் காவல் துறையினர் .