மலம் கழிக்க சென்றவருக்கு, துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்! வெளியான பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

man attacked by unknown dangerous person


man-attacked-by-unknown-dangerous-person

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்தி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் மலம் கழிப்பதற்காக சூடுகாட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத சில நபர்கள் திடீரென அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். 

மேலும் அவரது கண்களில் குத்தியும்,  உடல்களில் பல இடங்களில் மோசமாக காயத்தை ஏற்படுத்திவிட்டும் அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் . 

toilet

இதில் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கார்த்தியை மறுநாள் காலை அப்பகுதி வழியே சென்றவர்கள் கண்டு மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி என்பவர் சம்பவம் நடைபெற்ற சுடுகாட்டு பகுதியை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் போலீஸ் தனிப்படை அமைத்து தப்பியோடிய திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.