தமிழகம்

மைனர் பெண்ணுடன் மஜா செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்! அதிரடி கைது!

Summary:

Man arrested in theni who cheated miner girl

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி சொல்லவே தேவை இல்லை.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வருஷநாடு பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

மேலும், தனிமையில் சந்தித்து உன்னை திருமனம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து, அடிக்கடி அப்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதோடு, அப்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.

அதன்பின், அந்த புகைப்படத்தை காட்டியே அப்பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார். இதை அப்பெண் பெற்றோரிடம் கூற, இதுபற்றி வருஷநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர்.


Advertisement