BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருச்சி தம்பதியினர் ரெட்டை கொலையில் முக்கிய திருப்பம்... சினிமா பாணியில் குறியீடு... காவல்துறையினர் அதிர்ச்சி.!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இளம் தம்பதியினர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திரைப்படப் பாணியில் குறியீடை காவல்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர். இந்த கொலை வழக்கில் குறியீடு ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் தனது உறவுக்கார பெண்ணான சாரதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷோபனாபுரம் பகுதியில் விஜய் சேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தின் நடுவில் இருக்கும் வீட்டில் கணவன் மற்றும் மனைவி வசித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்களது பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மற்றொரு முக்கிய தடயம் காவல்துறைக்கு தற்போது சிக்கி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கொலை நடந்த வீட்டின் கதவில் ரத்தத்தால் ஐ என்ற எழுத்து எழுதப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தை காவல்துறையினர் மற்றும் தடையியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். திரைப்படங்களில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் பயன்படுத்துவது போன்று இந்த கொலை செய்தவர்களும் குறியீடு பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் கொலையாளிகள் ஏன் ஐ என்று குறியீட்டை பயன்படுத்தினார்கள் இந்தக் குறியீட்டிற்கும் இறந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற ரீதியில் காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தக் குறியீட்டு சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.