நெஞ்சை உலுக்கும் சோகம்... 11-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!

நெஞ்சை உலுக்கும் சோகம்... 11-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி..!


maharashtra-6-aged-child-died-slipped-from-11-th-floor

குடும்பத்தினர் கண்முன்னே 6 வயது சிறுவன் 11 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பைகுல்லா, ஜாகுர்தி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள 11-ஆவது மாடியில் 6 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் சிறுவன் படுக்கையில் விளையாடிக்கொண்டு இருக்க, குடும்பத்தினரும் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். சிறுவன் ஜன்னல் வழியே திடீரென எட்டிப்பார்த்த நிலையில், அவன்  தவறி விழுதுள்ளான். 

சிறுவன் ஜன்னல் வழியே எட்டிபார்ப்பதை கண்டு அவனை பிடிக்க குடும்பத்தினர் முயன்ற போதும், நொடிப்பொழுதில் வீபரீதம் நிகழ்ந்துள்ளது. 11 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுவன், கீழே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரில் விழுந்து பலியாகி இருக்கிறான். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.