விளையாடச் சென்ற சிறுவன் சடடலமாக மீட்பு! கழுத்தில் இருந்த கயிரு தழும்பு, வாயில் ரத்தம்... நடந்தது என்ன? கதறும் தாய்... மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தில், வீட்டின் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேலன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டான். 3-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசாரும் கிராம மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை
தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் துபாயில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சத்யா, தங்களது இரு குழந்தைகளுடன் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்ற முத்துவேலன், மதிய உணவு நேரத்துக்குப் பிறகும் வீடு திரும்பவில்லை.
இதையும் படிங்க: பிறந்தநாள் கேக்கில் இருக்கும் மர்மம்... செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய மாப்பிள்ளை தம்பி...! பல கோணங்களில் பரபரப்பு விசாரணை..!!!
இதனால் பதற்றமடைந்த தாயும் உறவினர்களும் கிராமம் முழுவதும் தேடினர். சிறுவன் கிடைக்காததால் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
ட்ரோன் மூலம் தேடியபோது பாழடைந்த வீட்டில் சடலம்
இரவு வரை சிறுவன் குறித்த தகவல் கிடைக்காததால், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சிறுவனைக் கண்டுபிடிக்கத் தனிப்படைகள் அமைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து திங்கள்கிழமை காலை முதல் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்றது.
அப்போது, சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்த பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துவேலன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். அவனது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் சந்தேகம்
சிறுவனின் கழுத்தில் கயிறு தழும்பு இருந்ததாகவும், வாயில் ரத்தம் மற்றும் கண்ணின் கீழ் காயம் காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முத்துவேலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எனினும், மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
சிறுவன் எப்படிப் பாழடைந்த வீட்டுக்குச் சென்றான், அவனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த பலரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சிறுவனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கி தாயாருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வேற லெவல்... IAS அதிகாரி கேட்ட வித்தியாசமான வரதட்சணை..! மணமகள் எடுத்த நெகிழ்ச்சி முடிவு.... பின்னணியில் இருந்த அந்த ஒரு ரகசியம்..!!!