நியமித்த சில மணி நேரங்களில் போலீஸ் வேட்டையில் சிக்கிய அந்த பொருள்! ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்...!!!



madurai-grh-mortuary-drug-seizure

தமிழக அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க சிறப்பு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிணவறை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீஸ் சோதனை

மருத்துவமனை பிணவறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் கஞ்சா புகைப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை போலீசார் பிணவறை பகுதியை குறிவைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு... போதை மாத்திரை கும்பலை சுற்றி வளைத்த போலீஸ்.!! கூலி பட நடிகர்கள் கைது.!!

12 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

சோதனையின்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் 50 நைட்ரோசெபாம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், போதைப்பொருட்கள் அங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன, யாருக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, அதுவும் பிணவறை அருகே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்கள் சிக்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: BREAKING : அம்பலமான பேரம் அரசியல்.. தவெக MLA-விடம் பேரம் வழக்கில் 2 பேர் கைது....! திக்குமுக்காடும் திமுக..!!!