தமிழகம்

தமிழர் தற்காப்பு கலையான இந்த கலைக்கு முக்கியதுவம் அளித்துவரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்!!

Summary:

தமிழர் தற்காப்பு கலையான இந்த கலைக்கு முக்கியதுவம் அளித்துவரும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சிலம்பலை கற்றுத்தரப்படும் என்ற செய்தி மாணவ - மாணவிகளுக்கிடையே பெரும் வறவேற்பை ஏற்படுத்தி வருகிறது.

சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பக்கலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  பெரிதும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சிலம்பம் ஒரு பாடமாக கற்றுத்தரப்படும் என்றும், சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


Advertisement