தமிழகம் காதல் – உறவுகள்

கால் உடைந்து, அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண்! காதலனின் வாக்குமூலத்தால் ஆடிப்போன போலீசார்கள்!

Summary:

lover explain about the reason of killing girl

வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா. பிளஸ்-2 முடித்த இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கேன்டீனில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிவேதா மாலை வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் நிவேதா கிடைக்கவில்லை.

 அதனை தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரை அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் அருகேயுள்ள கல்குவாரியில் கால் உடைந்து, முகம்சிதைந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அவரது கைகளில் உள்ள டாட்டூவை வைத்து பெற்றோர்கள் அவர் நிவேதாதான் என கண்டறிந்துள்ளனர்.

அதனை  தொடர்ந்து போலீசார் நிவேதாவின் செல்போனை ஆய்வு செய்து அவர் கடைசியாக பிரகாஷ் என்ற ஆட்டோ ஓட்டுனருடன் பேசியதை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தினமும் ஆட்டோவில் அழைத்து செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நானும் நிவேதாவும் கடந்த 2 மாதமாக காதலித்து வந்தோம். இந்நிலையில் அவர் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவருக்கு வேறு சில ஆண்களுடனும் பழக்கம் இருந்ததால் திருமணத்திற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

இந்நிலையில் சமீபத்தில் நிவேதாவை கல்குவாரி மலைப்பகுதிக்கு அழைத்து சென்றிருந்தேன். அப்பொழுது அவர்  திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து என்னை  வற்புறுத்தினார். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  கோபத்தில் நான் அவரை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டேன். பின்னர் எனது நண்பன் நவீன் குமாரை அங்கு வரவழைத்து அவரது உதவியுடன் நிவேதாவின் செல்போனை எடுத்து குட்டையில் வீசி விட்டு,கைப்பையை கொண்டு சென்று எனது வீட்டுப்பகுதியில் புதைத்துவிட்டேன் என கூறியுள்ளார்.பின்னர் போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது நண்பன் இருவரையும் கைது செய்த்துள்ளது.


Advertisement