"காதலால் வந்த வினை..." இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலைவீச்சு.!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் ஆலந்தலையை சேர்ந்த மணிகண்டன் (30). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தசரா விழாவிற்காக விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற மணிகண்டனை, தோப்பூர் விலக்கு அருகே மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தப்பிக்க முயன்று அருகிலுள்ள மரக்கடைக்குள் தஞ்சம் புகுந்த மணிகண்டனை கண்டுபிடித்து மீண்டும் கடுமையாக வெட்டியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி விசாரித்த போலீசார் காதல் தொடர்பான தகராறினால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தலைநகரில் பயங்கரம்... ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை.!! காவல்துறை விசாரணை.!!
மேலும் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தப்பித்த கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடித்த பின்னரே, கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் பயங்கரம்... அடகு கடை அதிபர் குத்தி கொலை.!! மர்ம நபர் வெறி செயல்.!!