தமிழகம் Covid-19 Corono+

நடுரோட்டில் பிரசவ வலி.! சாலையிலையே வெளியே வந்த தலை.! கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசார்.!

Summary:

Lady cops helped woman deliver baby on the road

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பெண் போலீசார் சாலையில் வைத்து பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ரேவதி. கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்துவருகிறார் கோவிந்தன். இந்நிலையியல், கோவிந்தனின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனே தன்னிடம் இருந்த இருசக்கர வாகனத்தில் மனைவியை ஏற்றிக்கொண்டு கோவிந்தன் மருத்துவமனையை தேடி சென்றுள்ளார். இதனிடையே இரவு 9.30 மணியளவில் கோவை சிங்காநல்லூர் சிக்னல் வந்த போது, ரேவதிக்கு பிரசவ வலி அதிகமாகி அலறி துடித்துள்ளார்.

அந்நேரம் ஆத்மா அறக்கட்டளை மற்றும் ருதம்பரா அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமான படங்களை சிலர் சாலையில் இருக்கும் சுவர்களில் வரைந்துகொண்டிருந்தனர். அவர்களின் உதவியை கோவிந்த நாடியுள்ளார். அவர்கள் உடனே இதுகுறித்து அந்த பகுதி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விஷயத்தை அறிந்த காவலர் அர்ஜூன்குமார் சாலையில் உள்ள தடுப்புகள் மூலம் அந்த பெண்ணை சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்குமாறு கூறிவிட்டு, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள் கிருஷ்ணவேணி, பேபிரோஸி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

அங்கு வந்த பெண் போலீசார் உதவியுடன் ரேவதி சாலையிலையே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன்பின்னர் தாயும், சேயும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement