தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேசன் பொருட்கள்.! நடிகை குஷ்பு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் ரேசன் பொருட்கள்.! நடிகை குஷ்பு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?


kushboo-talk-about-vaccine

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திரைப்பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விதியை அரசு கொண்டுவர வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பு ஊசி போட்டுவிட்டு வந்த பிறகுதான் அவர்களுக்கு உரிய ரேஷன் பொருட்களை கொடுக்க வேண்டும். இதுபோல செய்தால் அனைவரும் தடுப்பூசியை போட்டு விடுவார்கள் என்று நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.