அடிக்கடி உடம்பு சரியில்லை.. தொழிலையும் நஷ்டம்! ஜோதிடர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..! அப்போ சித்தி தான் காரணம் ... நள்ளிரவு 12 மணிக்கு வாலிபர் செய்த வெறிச்செயல்..! பகீர் சம்பவம்..!!!



krishnagiri-woman-murder-superstition-suspect-arrested

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே செய்வினை வைத்ததாக ஏற்பட்ட மூடநம்பிக்கை சந்தேகம், கொலையில் முடிந்துள்ளது. கண்டகானப்பள்ளி கிராமத்தில் 50 வயதான சரசம்மா நள்ளிரவில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக அவரது உறவினரான அசோக் (27) போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்வினை வைத்ததாக சித்தி மீது சந்தேகம்

சலூன் கடை நடத்தி வந்த அசோக்கிற்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிய ஜோதிடம் பார்த்தபோது, யாரோ செய்வினை வைத்திருப்பதாக ஜோதிடர் தெரிவித்ததாக தெரிகிறது. இதை நம்பிய அசோக், தனது சித்தியான சரசம்மா மீது சந்தேகம் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: வேலை முடிந்து வரும்போது நடந்த கொடூரம்! சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அரசு பேருந்து கண்டக்டர்...! கொலைக்கான காரணம் என்ன? பகீர் சம்பவம்...!!!

இதையடுத்து சரசம்மாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே இதுதொடர்பாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் அதிர்ச்சிகரமான வகையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் வீட்டுக்குச் சென்று கொடூர தாக்குதல்

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் மதுபோதையில் சரசம்மாவின் வீட்டுக்குச் சென்ற அசோக், அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அசோக் சரசம்மாவின் கழுத்தை அறுத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸாரிடம் தானாக சரணடைந்த அசோக்

கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற அசோக், நள்ளிரவு 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் அவர் தானாகவே சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், சரசம்மாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூடநம்பிக்கை அடிப்படையிலான சந்தேகம் கொலைக்கான காரணமாக இருந்ததா, வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் அசோக்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எப்ப பாரு நகையை காட்டி வீடியோ போட்டாங்க...! பிரபல பெண் யூடியூபர் வீட்டில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள்! பரபரப்பு வாக்குமூலம்...!!!