13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
மருந்தகத்தில் சிகிச்சை.. போலி மருத்துவரால் பரிதாபமாக பறிபோன உயிர்..! கண்ணீரில் உறவினர்கள்.!

போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, நாச்சிக்குப்பம் கிராமத்தில் மருந்தகம் வைத்து நடத்தி வருபவர் தேவராஜ். இதே பகுதியை சார்ந்தவர் பிரபாகரன். பிரபாகரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை எடுத்துக்கொள்ள தேவராஜின் மருந்தகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பிரபாகரனுக்கு தேவராஜ் சிகிச்சையளித்த நிலையில், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் பிரபாகரனின் உறவினர்கள் அவரை வேப்பனஹள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் பிரபாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் உறவினர்கள் வேப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போதுதான், தேவராஜ் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தேவராஜின் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.