தமிழகம்

அணைக்கட்டில் மூழ்கி நிச்சயிக்கப்பட்ட ஜோடி துடிதுடிக்க மரணம்.. மக்களே உஷார்.. கண்ணீர் சோகம்.!

Summary:

அணைக்கட்டில் மூழ்கி நிச்சயிக்கப்பட்ட ஜோடி துடிதுடிக்க மரணம்.. மக்களே உஷார்.. கண்ணீர் சோகம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி, உரிகம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவமாதன். இவரின் மகன் சிவா (வயது 21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரில் வசித்து வந்தவர் சின்னராஜ். இவரின் மகள் அபிநயா (வயது 18). சிவாவிற்கும் - அபிநயாவிற்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜோடி உரிகம் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில், தடுப்பணையில் குளிக்க அபிநயா சென்றுள்ளார். சிவா தூரத்தில் காத்திருந்துள்ளார். நீச்சல் தெரியாத அபிநயா, நீரில் மூழ்கி காப்பாற்றக்கூறி தத்தளிக்கவே, சிவா அவரின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற சென்றுள்ளார்.


 
இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், பொதுமக்கள் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். ஆனால், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, அஞ்செட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement