ஆலங்குடி அருகே அடுத்தடுத்து வெட்டி சாய்க்கப்பட்ட கிடாய்கள்.! ஆனால் சாப்பிடுவது ஆண்கள் மட்டுமே.! முதுகலை பட்டதாரி கூறும் சுவாரஸ்ய தகவல்கள்.!

ஆலங்குடி அருகே அடுத்தடுத்து வெட்டி சாய்க்கப்பட்ட கிடாய்கள்.! ஆனால் சாப்பிடுவது ஆண்கள் மட்டுமே.! முதுகலை பட்டதாரி கூறும் சுவாரஸ்ய தகவல்கள்.!


kidai-vettu-pooja-in-kuppakudi

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் திருவிழா கொண்டாடப்படுவதோடு, காப்பு கட்டுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல், கிடாய் வெட்டுதல் போன்ற விஷயங்கள் நடத்துவது வழக்கம். பல்வேறு விசேஷங்கள் நிறைந்த மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. தென்மாவட்டங்களில் பலரின் குலதெய்வ கோவில்களில் சிலர் அந்த தெய்வத்திற்கு கோழி (சாவல்) அறுத்தல், ஆடு (கிடாய்) வெட்டுதல் போன்றவற்றையும் ஆடி மாதத்தில் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி முனிகோவிலில் கிடாய் வெட்டு பூஜை நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு முனீஸ்வரர் சுவாமிக்கு கிடாய் வெட்டி பூஜை நடந்தது. திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தீப ஆராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. 

kidai vettu

அந்த கோவிலில்  கிடாய்களும், பல கோழிகளும் வெட்டி பூஜை செய்துள்ளனர். குறிப்பாக கிடாய் வெட்டு பூஜையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் கொடுக்கப்படும். அதாவது கிடாயை பிடிப்பது ஒருவர், கிடாயின் கால்களை பிடிப்பது ஒருவர். கிடாய் வெட்டிய பின்பு அந்த அரிவாளை வாங்குவது ஒருவர் என அந்த கிடாய் வெட்டு பூஜை நடைபெறும்.

இந்தநிலையில் இந்த கிடாய் வெட்டு நிகழ்வில் கலந்துகொண்ட பாத்தம்பட்டியை சேர்ந்த சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி தினேஷ்பாபு என்பவரிடம் இந்த நிகழ்ச்சி தொடர்பாக கேட்டபோது, இது எங்களது குலதெய்வ வழிபாடு. இந்த கோவிலில் வெட்டப்பட்ட கிடாய்களை சமைத்து, சாமிக்கு படைத்து ஆண்கள் மட்டுமே சாப்பிடுவது வழக்கம். இந்த நிகழ்வில் உற்றார் உறவினர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.