டாக்டருக்கு ஆ., படம் அனுப்பி, பலாத்கார புகார் மிரட்டல் - 2 பெண்கள் அதிர்ச்சி செயல்.. அதிரடி கைது.!
மருத்துவருக்கு ஆபாச படங்களை வாட்ஸப்பில் அனுப்பி, பாலியல் புகார் கொடுப்பதாக பணம் கேட்டு மிரட்டிய 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரின் செல்போன் எண்ணுக்கு அறிமுகமில்லாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வர, அதற்கு மருத்துவர் பதிலளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மருத்துவருக்கு மீண்டும் தொடர்பு கொண்ட இளம்பெண், சிகிச்சைக்கு சந்தேகம் கேட்பது போல ஆபாசமாக, காம இச்சையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், மருத்துவரின் அலைபேசிக்கு ஆபாச படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நான் உங்களின் மீது பலாத்கார புகார் அளிக்க இருக்கிறேன். நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருக்க ரூ.3 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். மேலும், துபாயை சேர்ந்தவரும் மருத்துவருக்கு தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், திருச்சூர் மண்ணூத்தி கிராமத்தை சேர்ந்த நவுபியா (வயது 33), அவரின் தோழி நிஷா (வயது 29) ஆகியோரை கைது செய்தனர். துபாய் நகர் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.