பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த மருத்துவ மாணவி பிரதீபா..! மர்மமாக இருந்த மரணத்தில் வெளியானது காரணம்..! எப்படி இறந்தாராம் தெரியுமா..?
பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த மருத்துவ மாணவி பிரதீபா..! மர்மமாக இருந்த மரணத்தில் வெளியானது காரணம்..! எப்படி இறந்தாராம் தெரியுமா..?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த இறுதி ஆண்டு மருத்துவ மாணவி பிரதீபா சில வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் தனது அறையில் இறந்துகிடந்த நிலையில், இதய கோளாறு காரணமாக அவர் உயிர் இழந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை ரமேஷ்என்பவரின் 22 வயது மகள் பிரதீபா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தான் தங்கியிருந்த அறையில் பிரதீபா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ப்ரதீபாவின் மரணம் மர்மமாக இருந்தநிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவும் இல்லை, கொலையும் இல்லை, மாரடைப்பும் இல்லை என முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது அனைவரையும் குழப்பத்தில்ஆழ்த்தியது. அதேநேரம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனாவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ப்ரதீபாவுக்கு திசு பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில், ப்ரதீபாவின் இதய வாழ்வு பாதிக்கப்பட்டிருந்ததும், அதில் சில இடங்களில் அடைப்பு இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனை அடுத்து இந்த நோயின் காரணமாகவே பிரதீபா இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.