அடக்கடவுளே எல்லாம் போச்சு, அதிர்ச்சியில் கண்ணீர்விட்ட கஸ்தூரி, தீயாய் பரவும் புகைப்படத்தால் வருத்ததில் ரசிகர்கள்.!

அடக்கடவுளே எல்லாம் போச்சு, அதிர்ச்சியில் கண்ணீர்விட்ட கஸ்தூரி, தீயாய் பரவும் புகைப்படத்தால் வருத்ததில் ரசிகர்கள்.!


kasthuri-help-to-kaja-affected-people

கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்தும், விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்தும்  தவித்துவருகின்றனர்.

இவ்வாறு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், தன்னார்வல தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும்  நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் இருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த நடிகை கஸ்தூரி சமீபத்தில் நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சந்தித்து பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கியுள்ளார்.


இவ்வாறு மன்னார்குடிக்கு வருகைதந்த கஸ்தூரி கீழக்கரை என்ற இடத்தில் தென்னை மரங்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் தலையில் கைவைத்தபடி கண் கலங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கஸ்தூரி கஜா புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.