தமிழகம்

குடும்பத்தகராறால் விபரீதம்.. விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை.. கண்ணீரில் உறவினர்கள்.!

Summary:

குடும்பத்தகராறால் விபரீதம்.. விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை.. கண்ணீரில் உறவினர்கள்.!

குடும்ப தகராறு காரணமாக, இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவேல். இவர் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உத்ரியா ஜூலி.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது. இதனால் ஜூலி மிகவும் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனியாக வீட்டில் இருந்த போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் ஜூலி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது ஜூலிக்கு தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த பசுபதிபாளையம் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement