உள்ளே விட முடியாது... எ.வ.வேலுவின் வீட்டு வாசலிலே நின்று உற்று நோக்கும் திமுக வழக்கறிஞர்! லஞ்ச ஒழிப்புத்துறை மறுத்த அனுமதி... பரபரப்பு வீடியோ!!!
திமுக முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குள் செல்ல முயன்ற திமுக வழக்கறிஞர் சரவணனை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை
கடந்த 2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக 'அறப்போர் இயக்கம்' அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவருடன் தொடர்புடைய 14 இடங்களில் DVAC அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING : அதிர்ச்சி! என்னோட ஓட்டை யாரோ போட்டுட்டாங்க.... அடுத்தடுத்து பெண்கள் அதிரடி புகார்! சர்கார் பட பாணியில் பரபரப்பு வீடியோக்கள்....!!!
வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு
சோதனை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த திமுக வழக்கறிஞர் சரவணன், தாம் வழக்கறிஞராக வந்திருப்பதாக கூறி வீட்டிற்குள் அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால், தற்போது உள்ளே செல்ல அனுமதி வழங்க முடியாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்ததால், அவர் வெளியிலேயே நிறுத்தப்பட்டார்.
வீட்டு வாசலில் பரபரப்பு
இதையடுத்து, வீட்டின் நுழைவாயில் அருகே சிறிது நேரம் நின்று உள்ளே நடைபெறும் நடவடிக்கைகளை கவனித்த சரவணன், பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றார். அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆழ்வார்பேட்டை பகுதியில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
“சார் வழக்கறிஞர் வந்து இருக்கேன் உள்ளே விடுங்க..! இப்போ உள்ள விட முடியாதுங்க சார்..?”
எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் கதவு வழியே உற்று நோக்கிய தி.மு.க வழக்கறிஞர் சரவணன்..#DMK | #EVVelu | #Chennai | #PolimerNews pic.twitter.com/5rXWVD3Xd1
— Polimer News (@polimernews) June 25, 2026
இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!