கரூரில் உயிரந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 31 பேருக்கு அரசு பணி! யாருக்கு என்ன வேலை? முழு லிஸ்ட் வெளியீடு...!!!



karur-accident-relief-government-jobs-beneficiaries-lis

கரூரில் அண்மையில் நிகழ்ந்த கரூர் விபத்து பாதிப்புகளைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு அடுத்தகட்ட நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி

வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளது. குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! விடுபட்ட இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

முதலமைச்சர் முன்னிலையில் ஆணைகள் வழங்கப்படும்

ஜூலை 10, 2026 அன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்கூட்டரங்கில் நடைபெறவுள்ள முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தின் போது, தகுதியான பயனாளிகளுக்கு அரசு பணி நியமன ஆணைகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட உள்ளன.

பல துறைகளில் பணியிடங்கள் ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட வருவாய் அலகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு கருணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: கரூர் கூட்ட நெரிசலில் இழந்த 41 பேரின் குடும்பகளுக்கும் அரசு பணி.! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு.!!!