BREAKING: கரூர் கூட்ட நெரிசலில் இழந்த 41 பேரின் குடும்பகளுக்கும் அரசு பணி.! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு.!!!



cm-vijay-karur-victims-families-government-job-appointm

கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு முக்கிய நிவாரண நடவடிக்கையை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணியிடங்களை வழங்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நேரில் வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 10 மற்றும் 11-ல் பணி நியமன ஆணை

கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான நியமன ஆணைகள் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய அரசியல் பிரபலம்! இத யாரும் எதிர்பார்க்கலையே....

கரூருக்கு முதல்வரின் முதல் அரசு பயணம்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கரூர் செல்லவுள்ள விஜய், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்பின்னர், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிவாரண நடவடிக்கைக்கு முக்கியத்துவம்

உயிரிழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது முக்கியமான நிவாரண நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் விஜய்! எங்களுக்கு வேணாம்! விஜய் கொடுத்த முழு பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்!