தமிழகம் சினிமா

அந்த மிருகங்களை பெற்றோர் கண்முன்னே எரித்து கொல்லுவேன்! கோபத்தில் கொதித்துப்போன பிரபல இயக்குனர்.! யார் தெரியுமா?

Summary:

karthik thangavel angry on pollachi issue

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் இரத்தம் கொடுத்து போனர். மேலும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் எனவும் குரல் எழுப்பி வந்தனர்.

அதனை தொடர்ந்து  பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

karthik thangavel director க்கான பட முடிவு

மேலும் இந்த காமக்கொடூரன்களுக்கு எதிராக  திரைபிரபலங்களும், அரசியல் கட்சியினரும், பொது மக்களும், சமூக வலைதளவாசிகளும் கொந்தளித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான அடங்க மறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இதுகுறித்து ட்விட்டரில் கடும் கோபத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளை அவர்களின் பெற்றோர் முன்பே எரித்து விடுவேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. விசாரணை நடத்தி தாமதிக்க வேண்டாம். உடனே குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். 


 


Advertisement