என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
உயிர்பறித்த செல்போன் பரிசு.. பெற்றோர் கண்டிப்பால் தீக்குளித்து சிறுவன் தற்கொலை.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டம், கோட்டூர் தொலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (வயது 17). இவர் கோட்டூரில் செயல்பற்று வரும் தனியார் கல்லூரியில் பி.யூ.சி முதல் வருடம் பயின்று வந்த நிலையில், மகனுக்கு பெற்றோர் விலையுயர்ந்த செல்போனை பரிசாக கொடுத்துள்ளனர். இந்த செல்போனை வைத்து எந்த நேரமும் நாகராஜ் கேம் விளையாடி வந்துள்ளார்.
இதனால் கவலையடைந்த பெற்றோர், ஒரு அளவுக்கு மேல் செல்போனில் விளையாடுவதை தவிர்த்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி இருக்கின்றனர். இதனை கண்டுகொள்ளாத நாகராஜ் தொடர்ந்து கேம் விளையாடுவதில் மும்மரமாக இருந்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் நாகராஜிடம் இருந்து செல்போனை புரிந்துகொள்ளவே, பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்துபோன நாகராஜ், கடந்த பிப். 16 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணாததால், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோட்டூர் ஏரிக்கரை பகுதியில் வாலிபரின் உடல் எரிந்த நிலையில் இருப்பதாக பிப்.20 ஆம் தேதி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அது மாயமான நாகராஜ் என்பது உறுதியானது. மேலும், வீட்டில் இருந்து வெளியேறிய நாகராஜ், விரக்தியில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டதும் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.