தமிழகம்

அட கருமமே..! நீ எல்லாம் மனுஷன் தானா.... நாக்கால் நக்கி, காலால் மிதித்து ரஸ்க் தயாரிக்கும் இளைஞர்.!

Summary:

அட கருமமே..! நீ எல்லாம் மனுஷன் தானா.... நாக்கால் நக்கி, காலால் மிதித்து ரஸ்க் தயாரிக்கும் இளைஞர்.!

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பண்டங்களில் ரஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகாலையில் காலை உணவிற்கு முன்பு பலர் டீயில் ரஸ்க்கை நனைத்து சாப்பிடுவது வழக்கம். இதனால் அதிகம் வியாபாரம் ஆகும் ரஸ்க், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரஸ்க் தயாரிப்பது குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் காரைக்குடி பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் ரஸ்க்கை பாக்கெட் செய்வதற்கு முன்பு நாக்கால் நக்குவதும், காலால் மிதிப்பதும் போன்ற அருவருப்பான செயல்களை செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த இழிவான செயலில் ஈடுபட்ட நபர் மீதும், தொடர்புடைய தொழிற்சாலைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், காரைக்குடியில் அந்த பேக்கரியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது தரமற்ற, சுகாதாரமற்ற ரஸ்க்குகள் தயாரிக்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டி அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.
 


Advertisement