தனிமையில் பேசணும் வா.... பழைய ஓட்டு வீட்டுக்குள் போன பைனான்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! ஹனி டிராப் வலையில் சிக்க வைத்து விளையாட்டை விளையாண்ட கேடி பெண்!!!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்ஸ் தொழிலதிபரை குறிவைத்து, பழக்கத்தை பயன்படுத்தி ஹனி டிராப் வலையில் சிக்கவைத்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண் ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண உதவியால் தொடங்கிய பழக்கம்
திருப்பத்தூர் அருகே தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான வடிவேலுக்கு, கடந்த ஜூன் மாதம் 'கவிதா' என்ற பெயரில் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவசரமாக பணம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் வடிவேல் கூகுள் பே மூலம் ரூ.4,500 அனுப்பியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் தொடர்ந்து தொலைபேசி மூலம் பழக்கம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹனி டிராப் வலையில் சிக்கிய தொழிலதிபர்
பின்னர் காரைக்குடிக்கு வருமாறு கூறிய அந்தப் பெண், தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி காரைக்குடிக்கு சென்ற வடிவேலை, பழைய ஓட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் வெளியே வந்து, அவரை மிரட்டி தாக்கியதுடன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை வழங்க முடியாது என கூறிய நிலையில், அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில் இருவர் கைது
வீடு திரும்பிய வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூன்று பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உல்லாசம் வேண்டுமா வாங்க.. பைனான்சியருக்கு கும்மாங்குத்து.. ஆசையாக பேசி கதறவைத்த பெண்.. ட்விஸ்ட் வைத்த போலீஸ்.!