#Breaking: கனமழை எதிரொலி: முதல் மாவட்டமாக வெளியானது விடுமுறை அறிவிப்பு.!

#Breaking: கனமழை எதிரொலி: முதல் மாவட்டமாக வெளியானது விடுமுறை அறிவிப்பு.!



Karaikal District Holiday for School on 8 Jan 2024 

 

தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சில மாவட்டங்களில் காலை ஆரம்பித்த மழை, விட்டுவிட்டு இன்னும் நீடித்து வருகிறது.

புதுச்சேரி-காரைக்கால் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில், நாளை (ஜனவரி 09, 2024) காரைக்கால் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுப்பு வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.