வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!
பல மில்லியன் அமெரிக்க சொத்து உங்களுக்கு... மெயில் வருதா?.. நைஜீரிய இளைஞர் கைது.. 51 இலட்சம் நாமம்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதியில் வசித்து வரும் பெண்மணிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில், "அமெரிக்காவில் வசிக்கும் பெண்மணியின் கணவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வாழ்வின் மீதான பிடிப்பை இழந்துள்ளவர் சொத்துக்களை தானம் செய்ய முன்வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த சொத்துக்களை பெற்றுக்கொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இதன் மூலமாக பல மில்லியன் டாலர் சொத்துக்கள் கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய பெண்மணியும் அடையாளம் தெரியாதவருடன் உரையாடலை தொடங்க, அமெரிக்க பணம் எப்போது? எப்படி? கிடைக்கும் என்று கேட்டதற்கு, டாலரை இந்திய மதிப்பில் மாற்றி கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பெண்மணியும் பல தவணையாக ரூ.51 இலட்சம் பணத்தை கொடுத்த நிலையில், அமெரிக்க டாலர்கள் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண்மணி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் துறையினருடன் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
பெண் பணம் அனுப்பிய வங்கிக்கணக்கை ஆய்வு செய்கையில், அது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, நொய்டாவிற்கு சென்ற காவல் துறையினர் நைஜீரிய நாட்டினை சேர்ந்த அபுகா பிரான்சிஸ் என்பவரை கைது செய்து குமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.