ஜெபம் செய்வதாக நடித்து சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய பயங்கரம்.. ட்ராப் செய்து தூக்கிய காவல்துறை., அரங்கேறியிருந்த கொடூரம்.!

ஜெபம் செய்வதாக நடித்து சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய பயங்கரம்.. ட்ராப் செய்து தூக்கிய காவல்துறை., அரங்கேறியிருந்த கொடூரம்.!


kanyakumari-nagarcoil-kidnapped-minor-girl-rescued-man

சிறுமியிடம் ஆசைவார்த்தை பேசி கடத்தி சென்ற நபர், வெளிமாநிலத்தில் அவருதுடன் குடும்பம் நடத்திய பயங்கரம் நிகழ்ந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத சிறுமிக்கு ஜெபம் செய்வதாக நடித்து காமுகன் நிகழ்த்திய கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், தென்தாமரைக்குளம் கரம்பவிளையில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தை இருக்கின்றனர். பூதப்பாண்டி பகுதியில் வசித்து வரும் தொழிலாளிக்கும் - செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழகத்தின்பேரில் செந்தில்குமார் தொழிலாளி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். 

இதில், ஒருமகளின் உடல்நலம் திடீரென பாதிக்கப்படவே, செந்தில்குமார் ஜெபம் செய்தால் உடல்நிலை சரியாகும் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்து தொழிலாளியின் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார், ஜெபம் செய்வது போல அனைவரிடத்திலும் நெருங்கி பழகி இருக்கிறார். தொழிலாளியின் மூத்த மகளான பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமியிடம் நெருங்கி பழகி வந்த நிலையில், அவரிடம் ஆசை வார்த்தையை கூறியுள்ளார். 

குடும்பத்தினரும் கயவனின் செயலை கவனிக்காமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் செந்தில்குமார் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் பதறிப்போன தொழிலாளி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இருவரையும் தேடி வந்தனர். 

tamilnadu

இந்நிலையில், செந்தில்குமாரின் மனைவி உதவியுடன் அவரை கைது செய்ய அதிகாரிகள் முயற்சித்த நிலையில், அவரின் அலைபேசியில் இருந்து மனைவியை வைத்து பேசவிட்டுள்ளனர். மனைவியின் கூற்றுப்படி செல்போன் மூலமாக பேசிய செந்திலல்குமார், திருவனந்தபுரம் வருகை தந்துள்ளார். இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் செந்தில்குமாரை கைது செய்து மாணவியை மீட்டனர். 

செந்தில்குமாரின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மாணவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில், சிறுமியிடம் ஆசையாக பேசி வெளிமாநிலத்திற்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதும் அம்பலமானது. இதனால் கடத்தல் வழக்கை போக்ஸோவாக பதிந்த காவல் துறையினர், செந்தில்குமாரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.