தமிழகம்

கன்னியாகுமாரி போலீஸ் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.! சிசிடிவி காட்சிகள் வெளியானது..!

Summary:

Kanyakumari gun shot police dead

போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி ஓன்று அமைந்துள்ளது.

இந்த சோதனை சாவடியில் நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இரவு சரியாக 9.45 மணியளவில் அந்த பகுதியில் நடந்துவந்த இரண்டு மர்ம நபர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி நான்கு முறை சுட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி ஷூட்டில் வில்சன் சம்பவ இடத்திலையே உயிர் இழந்தார். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுவிட்டு கொலையாளிகள் இருவரும் தப்பித்து ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.Advertisement