கள்ளக்காதல்ல காஞ்சிபுரம் தான் No.1.. ஷாக் ரிப்போர்ட்டை வெளியிட்ட ஆய்வு நிறுவனம்.!



kanjipuram is no one for illegal affair

சமீபத்தில் வெளிவந்த இரண்டு சர்வதேச ஆய்வுகள், இந்தியாவில் அலுவலக ரொமான்ஸ் மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவுகள் பெரிதும் அதிகரித்து வருவதை வெளிக்காட்டுகின்றன. ரகசிய உறவுகள் குறித்த தளமான ஆஷ்லே மேடிசன் (Ashley Madison) மற்றும் யூகவ் (YouGov) இணைந்து நடத்திய ஆய்வில், 11 நாடுகளில் 13,581 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டது. இதில், மெக்சிகோவுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆய்வின் படி, 10ல் 4 இந்தியர்கள் தங்கள் அலுவலக சக ஊழியருடன் கள்ளகாதல் உறவில் இருக்கிறார்கள் அல்லது இருந்துள்ளனர். ஆண்களில் 51% பேர் ஆபீஸ் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளதாகவும், பெண்களில் 36% பேர் இதேபோல உறவுகளில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெண்களில் 29% பேர் மற்றும் ஆண்களில் 27% பேர் ஆபீஸ் உறவுகளைத் தவிர்க்க முன்வந்துள்ளனர்.

இளம் தலைமுறையினர் (18-24 வயது) இதுபோன்ற உறவுகளைத் தவிர்க்கும் எண்ணம் அதிகம் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், திருமணத்தைக் கடந்து உறவுகளைத் தேடுவோருக்கான டேட்டிங் தளமான கிளீடன் (Gleeden) நடத்திய ஆய்வும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்துகிறது.

illegal affair

இதன்படி, இந்தியர்களில் 35% பேர் ஓப்பன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாகவும், மேலும் 41% பேர் தங்கள் வாழ்க்கைத் துணை ஒப்புக்கொண்டால் அத்தகைய உறவுகளில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஓபன் ரிலேஷன்ஷிப் டிரெண்ட் பெருநகரங்களில் மட்டுமின்றி, இரண்டாம் நிலை நகரங்களிலும் அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக காஞ்சிபுரம், ஓபன் உறவுகள் அதிகமாகக் காணப்படும் நகரமாகத் திகழ்கிறது. அங்குள்ள பல்வேறு ஐடி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் காரணமாக, பல மாநிலத்தினரும் வெளிநாட்டினரும் கூட பணிபுரிவதால் இதுபோன்ற உறவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

மொத்தத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி, பணியிட உறவுகள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளின் வரம்பு பாதிக்கப்பட்டுள்ளதை இந்த இரு ஆய்வுகளும் தெளிவாக காட்டுகின்றன.