நில அபகரிப்பு புகாரில், ரௌடிக்கு ஒத்து ஊதிய ஆயுதப்படை காவலர் பரபரப்பு கைது.!Kanchipuram Sunguvarchatram Land Occupy Case Armed Police Arrested by Police Help to Rowdy

ரௌடியுடன் இணைந்து பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயற்சித்த காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் குணா. இவர் அப்பகுதியில் ரௌடியாக வளம் வந்துள்ளார். கொலை, கொலை முயற்சி, அடிதடி உட்பட 24 க்கும் மேற்பட்ட வழக்குகள் இவரின் பெயரில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள கீராநல்லூர் கிராமத்தை சார்ந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயற்சித்த குற்றச்சட்டத்தில் குணா கைது செய்யப்பட்டார். 

kanchipuram

ஜாமினில் வெளியே வந்த ரௌடி குணா சில நாட்களாகவே தலைமறைவான நிலையில், அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கீராநல்லூர் நில அபகரிப்பு புகாரில் குணாவுக்கு உடந்தையாக இருந்த சென்னை ஆயுதப்படை காவல் அதிகாரி வெங்கடேசனை சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.