புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கோக்கில் கிடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. உயிர் பயத்தில் இளைஞர்.!
சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நபர், வேலை விஷயமாக படைப்பைக்கு சென்றிருந்தார். காலை நேரத்தில் உணவு சாப்பிடாத காரணத்தால், பசியின் காரணமாக கோக-கோலா வாங்கி குடிக்கலாம் என பெட்டிக்கடை ஒன்றில் வாங்கி குடித்துள்ளார்.
பாதி கோக்கை குடித்தவர், பாட்டிலின் அடியில் பூச்சிகள் போன்ற கரைசல் இருந்ததை அதிர்ச்சி அடைந்துள்ளார். அது பூச்சிதானா? வெடிபொருளா? என்பது உறுதி செய்யப்படவில்லை. பாட்டிலில் காலாவதி தேதியும் சரிவர தெரியவில்லை. அவருக்கு லேசான வயிற்று மந்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம்: அக்கா-தம்பி பாலியல் பலாத்காரம்.., 5 வயது சிறுவனை கொன்ற காம சர்வேயர்.. தமிழகமே பேரதிர்ச்சி.!
உணவுப்பாதுகாப்புத்துறை & காவல்துறை விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உடனடியாக கடைக்கு சென்று முறையீடு செய்துள்ளார். மேலும், அங்கிருந்தவாறு மணிமங்கலம் காவல்துறைக்கும், உணவுப் பாதுகாப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.
நேரில் வந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர். உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சார்பிலும் விசாரணை நடைபெறுகிறது.
இளைஞர் அச்சம்
பாதிக்கப்பட்ட இளைஞருக்கு தற்போது வரை தீவிர உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். கோக்கின் மனம், சுவை மாறுபட்டு இருந்ததாகவும், அதனை வாங்கிக் குடித்தவர் தெரிவிக்கிறார். இதனால் தனது உயிருக்கு ஏதேனும் நேருமோ என்ற அச்சமும் இளைஞரை ஆட்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரம்... 6 வயது சிறுவன் அடித்து கொலை.!! அரசு ஊழியர் கைது.!!