90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில், பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, கமலின் பதிவிற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும். என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கமல் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்துக்குக் கிளம்புவதைச் சற்று நேரம் ஒத்திவைத்து கமல் வருகைக்காக ஸ்டாலின் காத்திருந்தார். இதனையடுத்து கமல் வந்தவுடன் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். கமல்ஹாசனை ஸ்டாலின் வரவேற்றார். அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். பின்னர் கமல்ஹாசன் கிளம்பினார்.