பிரச்சாரத்தின் இடையே டென்ஷனான கமல்!! கட்சி சின்னம் என்று கூட பார்க்காமல் தூக்கி வீசினார்.. வைரல் வீடியோ..

பிரச்சாரத்தின் இடையே டென்ஷனான கமல்!! கட்சி சின்னம் என்று கூட பார்க்காமல் தூக்கி வீசினார்.. வைரல் வீடியோ..


kamal-throw-torch-light-when-his-mike-gives-trouble

பிரச்சாரத்தின்போது மைக் வேலை செய்யாத கோவத்தில் தனது சின்னமான டார்ச்லைட்டை கமல் தூக்கி வீசிய காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

TN Election 2021

தேர்தலை முன்னிட்டு அங்கையே முகாமிட்டுள்ள அவர் தினமும் தொகுதி மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது பாதியிலேயே மைக் தொந்தரவு செய்தது. இதனால் கமல் பேசுவது அங்கிருந்த மக்களுக்கு கேட்கவில்லை.

தொடர்ந்து மக்கள் கமலை பார்த்து கேள்விகள் எழுப்ப, அவர்களது கேள்விக்கு பதில் சொல்ல மைக் இல்லாமல் சைகையிலையே பேசிக்கொண்டிருந்தார் கமல். ஆனால் தொடர்ந்து மைக் வேலை செய்யாதநிலையில், பிரச்சார வாகனத்தை அங்கிருந்து நகர்த்த சொல்லிய கமல், சிறிது நேரத்தில் தனது கையில் இருந்த தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை வேகமாக வாகனத்திற்குள் தூக்கி எறிந்தார்.

இந்த காட்சிகளை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.