கேரளாவில் ஏற்கனவே அதிக வேலை செய்த மருத்துவ நிபுணர்களுக்கு அதிக வலிமை தேவை! கமல்ஹாசன்

கேரளாவில் ஏற்கனவே அதிக வேலை செய்த மருத்துவ நிபுணர்களுக்கு அதிக வலிமை தேவை! கமல்ஹாசன்



kamal-talk-about-flight-accident

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்து ஏற்பட்டு விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்துள்ளது. இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விமான விபத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான குழுவினர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விபத்து குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில்இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனைகளில் மீண்டு வருபவர்களுக்கு வாழ்த்துகள். கேரளாவில் ஏற்கனவே அதிக வேலை செய்த மருத்துவ நிபுணர்களுக்கு அதிக வலிமை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.