பிறந்தநாளில் காவலர் எடுத்த விபரீத முடிவால் சோகம் : தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்.!kallakurichi-ulunthurpet-police-officer-suicide

தனது பிறந்தநாளன்றே காவலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் நடந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில், முதல்நிலை காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். 

இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்றே காவலர் பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

Kallakurichi

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், காவலரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.