தமிழகம்

குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாப பலி.. கண்ணீரில் கிராமம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!

Summary:

குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் பரிதாப பலி.. கண்ணீரில் கிராமம்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!

குளத்திற்கு விளையாட சென்ற 2 சிறார்கள் நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ஓட்டன்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகள் அனிஷா - சுரேஷ். இருவரும் அக்கா - தம்பி ஆவார்கள். இந்நிலையில், அக்கா - தம்பி இருவரும் இன்று கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றதாக தெரியவருகிறது.

அப்போது, இருவரும் நீரில் இறங்கி விளையாடியதாக தெரியவருகிறது. அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர், குழந்தைகளின் செருப்பு குளத்தின் அருகே இருப்பதை கண்டு தேடுகையில், இருவரும் சடலமாக மீட்டப்பட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓட்டன்குப்பம் கிராமத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட தகவலின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.


Advertisement