ஒரேநாளில் கோடிக்கணக்கான தமிழர்களின் ஆதரவு.. வறுமையிலும் படிப்பை விடாத தன்னம்பிக்கை நட்சத்திரமாக வசந்தி.!

ஒரேநாளில் கோடிக்கணக்கான தமிழர்களின் ஆதரவு.. வறுமையிலும் படிப்பை விடாத தன்னம்பிக்கை நட்சத்திரமாக வசந்தி.!


Kallakurichi Ulunthurpet Girl Vasanthi Works with Father Trending Video


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, பவழங்குடி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வசந்தி. இவரின் பெற்றோர் விவசாயிகள் ஆவார்கள். விவசாய குடும்பத்தில் போகத்திற்கு ஏற்றாற்போல வருமானம் இருக்கும் என்பதால், கடந்த 8 ஆண்டுகளாகவே கஷ்டம் நிலவி வந்துள்ளது. 

4 பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர் விவசாயம், இரவு நேரங்களில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் முந்திரியை பருப்புகள் விற்பனை என இருந்து வந்துள்ளனர். பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்த கல்லூரி மாணவி வசந்தி, தனது தாய் - தந்தைக்கு ஆதரவாக அவரும் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். 

பின்னர், தந்தையுடன் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதிகளில் முந்திரியை விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களுடன், கல்விக்கு தேவையான உதவியை செய்ய முன்வந்துள்ளனர்.