துரோகிகளால் சூழப்பட்ட அதிமுக.. அடுத்தகட்ட ஆக்சன் என்ன?.. இ.பி.எஸ் பாய்ச்சல்..இனி சரவெடிதான்.!

அதிமுகவை மு.க ஸ்டாலின் துரோகிகளுடன் சேர்ந்து முடக்க நினைக்கிறார். அனைவரின் எண்ணத்திலும் மண்ணைத்தூவி இயக்கத்தை மீட்டெழ செய்வோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் அதிமுக தொண்டர்களிடையே எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், "கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் உங்களை சந்திக்கிறேன். இதனால் மகிழ்ச்சி கொள்கிறேன். புரட்சி தலைவர், புரட்சித்தலைவி கட்டிக்காத்த அதிமுகவை துரோகிகள் ஒழிக்க நினைக்கிறார்கள்.
அவர்களின் எண்ணம் நடக்காது. சதியாலேயே கடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற இயலாமல் போயுள்ளது. அனைத்து தடையையும் உடைத்து நாம் ஆட்சியை அமைப்போம். துரோகிகளுடன் கைகோர்த்து திமுகவை முடக்க மு.க ஸ்டாலின் நினைத்து வருகிறார். ஒவ்வொரு அதிமுக தொண்டரும் கொதித்துப்போயுள்ளனர். நமது கோவிலை சீல் வைத்து பூட்டியுள்ளார்கள். காவல் துறை அதிகாரிகள் கூட துரோகிகளுக்கு துணை செல்கிறார்கள். துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்" என்று பேசினார்.