ஷாக் நியூஷ்...மகளிர் உரிமைத் தொகை.... தவெக அரசின் அதிரடி நடவடிக்கை! விரிவாக்கத்துக்கு முன் களையெடுப்பு..!!!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி இல்லாதவர்களும் மாதம் ரூ.1,000 பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தகுதி விதிகளை மீறி பயன்பெறும் நபர்களை கண்டறிந்து நீக்கும் பணிகள் விரைவில் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
தகுதி விதிகளை மீறி பயன் பெறுவதாக புகார்
தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்கள், கணிசமான அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர். இருப்பினும், விதிமுறைகளுக்கு மாறாக சிலர் தொடர்ந்து உரிமைத்தொகை பெற்று வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இனி இவர்களுக்கு கிடையாது! தமிழக அரசின் அதிரடி...!!!
தரவுத்தளங்கள் மூலம் மீண்டும் சரிபார்ப்பு
இதனால், தற்போதைய பயனாளிகளின் விவரங்களை பல்வேறு அரசுத் தரவுத்தளங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக வருமானம், நில உரிமை மற்றும் வாகனப் பதிவு உள்ளிட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
விரிவாக்கத்துக்கு முன் களையெடுப்பு
திட்டத்தை மேலும் பலருக்கு விரிவுபடுத்துவதற்கு முன்பாக, தகுதியற்றவர்களை நீக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. இந்த விரிவான சரிபார்ப்பின் மூலம் விதிமுறைகளுக்கு புறம்பாக நிதியுதவி பெறுவோர் கண்டறியப்பட்டால், அவர்களின் பயனாளி நிலை நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து உரிமைத்தொகை சென்றடைவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ1,000 இன்று இவர்களுக்கு வராது....! அரசின் அதிரடி எச்சரிக்கை....!!!