கஜா புயல் எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கஜா புயல் எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



kaja - schools and colleges leave for tmrw

கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் சென்றால் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர், வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலால் முதலில் வட உள்மாவட்டங்கள் மட்டும் மழையைப் பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தின் உள்மாவட்டங்கள் ஒருசிலவற்றிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வங்க கடலில் இருந்து மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நவம்பர் 15-ல் கடக்க கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Kaja cyclone

இதனால் நாளை 15 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்.