"மனைவியை கிண்டல் செய்த நண்பன் படுகொலை..." பாசக்கார கணவன் கைது.!!
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகேயுள்ள புலியூர் கண்டிகை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் அருண்குமார்(28) வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தேவி(25) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒரு மது போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி புலியூர் கண்டிகை கிராம எல்லையில் வயல்வெளியின் ஆள் நடமாட்டமில்லா பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சயடைந்த மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
வெங்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையை நடத்தினர். உடற்கூறாய்வு முடிவில் அவர் பலமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது செல்போனை ஆராய்ந்த போலீசார் இறப்பதற்கு முன்பு அவர் யாரிடம் கடைசியாக பேசினார் என்ற தகவல்களை சேகரித்தனர். அதில் அருண்குமார் கடைசியாக தனது நண்பர் ஆனந்தனுடன் பேசியிருப்பது தெரிய வந்தது.

இதற்கடுத்து ஆனந்தை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில் தனது மனைவியை அருண்குமார் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் இது தொடர்பாக பலமுறை கண்டித்தும் அவர் மீண்டும் அதையே செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்து, கடந்த 24 ஆம் தேதி திருநின்றவூர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்து போதையிலிருந்த அருண்குமாரை அடித்து கொலை செய்ததாக வாக்குமூலமளித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் கொடூரம்... 20 பவுன் நகை, 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு.!! மாமியாரை போட்டு தள்ளிய மருமகள்.!!
இதை தொடர்ந்து கொலையில் சம்பந்தப்பட்ட ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்களான அஜித்(29), சரவணன்(30), ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது விற்ற மூதாட்டி சிறையில் மர்ம மரணம்... காவல்துறை விசாரணை.!!