மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ஹைகோர்ட்டில் வேலை வாய்ப்பு; அதிகபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு..!
மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ஹைகோர்ட்டில் வேலை வாய்ப்பு; அதிகபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு..!

சென்னை உயர் நீதிமன்றம் 1412 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும், விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 01) 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காலி பணியிடங்கள்:
Junior Bailiff : 574
Senior Bailiff : 302
Xerox Operator : 267
Examiner : 118
Driver : 59
Process Server : 41
Reader : 39
Lift Operator : 9
Process Writer : 3
கல்வித் தகுதி:
ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம். மற்ற அனைத்து பதவிகளும்: SSLC தேர்வில் தேர்ச்சி
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2004 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவராக இருக்க வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சென்னை உயர் நீதிமன்ற ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம் : ஓட்டுநர் பதவிக்கு ரூ.500 ம், மற்ற அனைத்து பதவிகளும் ரூ.550 ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் முறையில் மட்டுமே கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும்.
சம்பள விவரம் :
Examiner – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900
Reader – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900
Senior Bailiff – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900
Junior Bailiff – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900
Process Server – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900
Process Writer – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800
Xerox Operator – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800
Lift Operator – Level 2 – ரூ.15,900 – ரூ.58,500
Driver – Level 8 – ரூ.19,500- ரூ.71,900
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28-08-2022. விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி 28-08-2022.
விண்ணப்பிக்கும் முறை : சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் (Recruitment Archives) பிரிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.