
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, சற்று உடல் சோர்வு ஏற்பட்டதால், கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துமனையில் பரிசோதித்துக்கொண்டதாகவும், அங்கு ரத்த அழுத்த அளவு பரிசோதிக்கப்பட்டதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பியதாக தகவல் வெளியானது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியான தகவலால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து விசாரிக்க தொடங்கினர்.
இதையடுத்து திமுக தலைமை இதை முற்றிலும் வதந்தி என மறுத்து, தற்போது மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisement
Advertisement