
Indians died for corona in america
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா அமெரிக்காவில் அதிகமாக பரவி அதிகப்படியான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் அதிகமான நபர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,108 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவம் வெறியாட்டம் ஆடி வரும் கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் மீண்டும் ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Advertisement
Advertisement