#Breaking: கோலாகலமாக 2024 ஆங்கில புத்தாண்டை வரவேற்ற இந்தியா: சென்னை, கோவாவில் களைகட்டிய கொண்டாட்டங்கள்.!



india-welcomes-new-year-2024

இந்தியத்திருநாடு 2023 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து, தற்போது 2024 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

சர்வதேச அளவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல்வேறு நாடுகளில் கலைகட்டி இருக்கும் நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு பின் தற்போது இந்தியா தனது புத்தாண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

எதிர்வரும் புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் நன்மையை சேர்க்கும் வகையில், நாட்டிற்கு வளத்தை அதிகரிக்கும் வகையில், எதிர்காலத்தை நோக்கிய சிறந்த வழித்தடத்தை ஏற்படுத்தி, நினைத்தது நடக்கும் வகையில் அமைய எமது ஸ்பார்க் தமிழ் (Spark Tamil) நிறுவனம் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு புத்தாண்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அது குறித்த காணொளி உங்களின் பார்வைக்காக..,

இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. சுற்றுலா நகரமான கோவாவிலும் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.‌