புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன்; அலட்சியத்தில் இருந்து மீண்டுவராத அதிகாரிகள்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம், காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருவபர் ராஜேஷ். இவர் மகன் அஜய் (வயது 12). சிறுவன் சம்பவத்தன்று சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்தார்.
அவர் அங்குள்ள மின் கம்பத்தை பிடித்து விளையாடியபோது, அங்கு சரிவர பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு பிணைக்கப்படாத மின்சார வயர்களில் இருந்து மின்சாரம் மின்கம்பத்தில் பாய்ந்து சிறுவன் பலியானார்.
மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை இல்லை
இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், சிறுவனின் உயிர் பறிபோய் 1 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை மின்கம்பம் சரி செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: 5 வயது குழந்தையின் உயிருக்கு எமனான மின்கம்பம்; இருகன்குடியில் நடந்த சோகம்.. ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபம்.!
மின்வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக வயர்களை செல்லோ டேப் வைத்து ஒட்டி சென்றுள்ளனர். மேற்படி எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இணையதள சேவைக்கான கம்பத்தை பிடித்தபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனினும், அதிகாரிகளின் அலட்சியம் வருத்தத்தை தருவதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!